முகப்பு
செய்திகள்

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள்: கூலி படக்குழு வெளியிட்ட புகைப்படங்கள்!

கூலி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

Updated On : 14 மார்ச், 2025 at 8:18 PM
கூலி படப்பிடிப்பில் ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ்.
பகிர்:

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து கூலி படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்களை படக்குழு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது.

லியோ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், சௌபின் ஷாகிர், ஷ்ருதி ஹாசன், உபேந்திரா, நாகார்ஜுனா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். குத்து பாடல் ஒன்றிற்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார்.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் நிறைவடைந்ததுள்ளது. ரஜினி நடிக்கும் காட்சிகள் முழுவதும் படமாக்கப்பட்ட நிலையில் ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார்.

கூலி படப்பிடிப்பில் ஷ்ருதிஹாசனுடன் லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று (மார்ச் 14) கூலி படத்தின் டீசர் அல்லது கிளிம்ஸ் விடியோ வெளியிடப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்த நிலையில், படப்பிடிப்பில் முக்கிய நடிகர்களுடன் லோகேஷ் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்துத் தெரிவித்துள்ளது.

கூலி படப்பிடிப்பில் அமீர் கானுடன் லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் மட்டுமின்றி இன்று கூலி படத்தின் வில்லனாக நடிக்கும் அமீர் கானுக்கும் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் பகிர்ந்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.