முகப்பு
செய்திகள்

திட்டமிட்டபடி வெளியாகும் எம்புரான்!

எம்புரான் வெளியீடு குறித்து...

Updated On : 7 ஜனவரி, 2026 at 10:22 AM
பகிர்:

நடிகர் மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம் எம்புரான். லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

மோகன்லாலுக்கு லூசிஃபர் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால் எம்புரான் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்தில் மோகன்லாலின் உதவியாளராக பிருத்விராஜ் சையத் மசூத் என்கிற கதாபாத்திரத்திலும் நடிகர் டொவினோ தாமஸ் கேரள மாநில முதல்வராகவும் நடித்துள்ளனர்.

முன்னதாக, இப்படம் மார்ச் 27 ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால், படத்தின் இணை தயாரிப்பாளரான லைகா நிறுவனம் கடந்த சில நாள்களாக ஆஷிர்வாத் சினிமாஸ் நிறுவனத்திடம் பெரிய தொகை கேட்டு அழுத்தம் கொடுத்ததாகவும் இதனால் இப்படம் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இதையும் படிக்க: சலார் - 2 ஒத்திவைப்பு?

ஆனால், இப்போது எம்புரான் திட்டமிட்டபடி மார்ச் 27 அன்று திரைக்கு வருமென இயக்குநர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். மோகன்லால் நடித்த படங்களிலேயே இதுவே மிகப்பெரிய பட்ஜெட் கொண்ட படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →