படம் பார்த்த தயாரிப்பாளர் நெகிழ்ச்சி.  படம்: எக்ஸ் / ஷிபு தமீன்ஸ்
செய்திகள்

வீர தீர சூரன் - கல்ட் கமர்ஷியல்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

வீர தீர சூரன் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

DIN

வீர தீர சூரன் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது.

தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் படத்தைப் பார்த்து தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

மிகவும் மகிழ்ச்சியான கணங்கள். படத்தை தணிக்கைக்கு அனுப்பும்முன் எங்களுக்கு கியூப் திரையரங்கில் இந்த அற்புதமான படத்தை எங்களுக்குக் காட்டிய மிகவும் திறமையான உண்மையான திரை எழுத்தாளர்-இயக்குநர் சு.அருண்குமாருக்கு நன்றி.

விக்ரமிடமிருந்து மிகவும் எதார்த்தமான, கல்ட்-கமர்ஷியல். இது விக்ரமின் சிறந்த படங்களில் ஒன்று. மார்ச்.27ஆம் தேதி முதல் ரசிகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெற காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

வீர தீர சூரன் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிறது. இதன் முதல் பாகம் அடுத்ததாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.

த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகவும் நீளமான சீன்களைக் கொண்டதாக இருக்குமென அதில் நடித்த நடிகர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பால் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT