ஏ.ஆர். ரஹ்மான் (கோப்புப்படம்) 
செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மானுக்கு என்ன ஆனது? மகன் விளக்கம்!

ஏ.ஆர். ரஹ்மான் உடல் நிலை குறித்து அவரது மகன் விளக்கம்.

DIN

நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் ஏ.ஆர். அமீன் விளக்கம் அளித்துள்ளார்.

ஏ.ஆர். ரஹ்மான் லண்டனில் இருந்து நேற்று சென்னை திரும்பிய நிலையில், இன்று(மார்ச் 16) காலை உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏ.ஆர். ரஹ்மானுக்கு கழுத்தில் ஏற்பட்ட வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடல் நிலை குறித்து அவரது மகன் ஏ.ஆர். அமீன் சமூக வலைதளப் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ”ரசிகர்கள், குடும்பத்தினர், நலன் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பான பிரார்த்தனைக்கு நன்றி. என் தந்தைக்கு நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டது. அதனால், சில வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டோம். அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுடைய அன்பான வார்த்தைகளும் ஆசிர்வாதங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியம். உங்கள் அனைவருக்கும் எங்களுடைய அன்பும் நன்றியும்” என்று ஏ.ஆர். அமீன் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பரிசோதனைகள் நிறைவடைந்து வீடு திரும்பியுள்ளதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

SCROLL FOR NEXT