நானும் ரெளடிதான்  இன்ஸ்டாகிராம்
செய்திகள்

குழந்தைகளை மையப்படுத்தி மீண்டும் ஒரு நிகழ்ச்சி!

நடிகை சிவாங்கி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சிக்கு நானும் ரெளடிதான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

DIN

நடிகை சிவாங்கி தொகுத்து வழங்கும் புதிய நிகழ்ச்சிக்கு நானும் ரெளடிதான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

இதற்கு முன்பு குட்டி சுட்டிஸ் நிகழ்ச்சி குழந்தைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வந்த நிலையில், அந்தப் பாணியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டுமொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்ட சிவாங்கி, திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வருகிறார்.

தனிப்பாடல்களையும் பாடிவரும் அவர், சிவகார்த்திகேயனின் டான் படத்தின் மூலம் நடிகையாகவும் மாறினார்.

அதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்த நடிகையாக மாறி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

நானும் ரெளடிதான் நிகழ்ச்சியில் சிவாங்கி

வெறும் பாடகியாக மட்டுமல்லாமல், மக்களை பொழுதுபோக்கிற்குள்ளாக்கும் கலைஞராகவும் மாற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட சிவாங்கி, தற்போது நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

நானும் ரெளடிதான்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு நானும் ரெளடிதான் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரம் மற்றும் நிகழ்ச்சியின் விதம் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | நீண்ட நாள்களுக்குப் பிறகு மீண்டும் டப்பிங் சீரியல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT