5 மொழிகளில் வெளியாகும் ஆஃபிஸர் ஆன் டூட்டி: ஓடிடி தேதி!
ஆஃபிஸர் ஆன் டூட்டி ஓடிடி வெளியீட்டுத் தேதி தொடர்பாக...
மலையாள மொழிப் படமான ஆஃபிஸர் ஆன் டூட்டி திரைப்படம், ஓடிடியில் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜித்து அஷ்ரஃப் இயக்கத்தில் குஞ்சக்கோ போபன் நடிப்பில் கிரைம் திரில்லர்தான் பாணியில் கடந்த பிப். 20-ல் வெளியான திரைப்படம் ஆஃபிஸர் ஆன் டூட்டி.
ஆஃபிஸர் ஆன் டூட்டி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்ததையடுத்து, இப்படம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி தமிழில் வெளியானது.
இதையும் படிக்க: தனுஷுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ?
மேலும், இப்படத்தில் நடிகர்கள் விஷாக் நாயர், ஐஸ்வர்யா ராஜ், பிரியாமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ரூ. 40 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆஃபிஸர் ஆன் டூட்டி திரைப்படம் நாளை(மார்ச் 20) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.