செய்திகள்

’தி வொண்டர்மென்ட் டூர்’: ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி அறிவிப்பு!

’தி வொண்டர்மென்ட் டூர்’ என்ற இசைநிகழ்ச்சி குறித்த அறிவிப்பை ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

DIN

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ‘தி வொண்டர்மென்ட் டூர்’ இசை நிகழ்ச்சி குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

உலகின் பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் ஏ.ஆர். ரஹ்மான். கடந்த வாரம் லண்டனில் இருந்து திரும்பிய ரஹ்மானுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், நீர்சத்துக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், சில மணிநேர சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார்.

இந்த நிலையில், வட அமெரிக்காவில் ‘தி வொண்டர்மென்ட் டூர்’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தவிருப்பதாக விடியோ ஒன்றை வெளியிட்டு ரஹ்மான் அறிவித்துள்ளார்.

வருகின்ற கோடைக் காலத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக அடுத்தடுத்த அப்டேட்கள் தெரிவிக்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT