பராசக்தி வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் பதில்!
பராசக்தி வெளியீடு குறித்து...
சிவகார்த்திகேயன் நடித்துவரும் பராசக்தி படத்தின் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கிவரும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இலங்கை தலைநகர் கொழும்புவில் துவங்கியுள்ளது.
இதையும் படிக்க: எம்புரான்: ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்த மோகன்லால்!
Advertisement
Advertisement
இங்கு, 1960-களின் காலகட்டத்திற்கான நம்பகத்தன்மைக்காக பழைய ரயில் நிலையம், கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகள் என காட்சிகள் படமாக்கப்படுவதாகத் தெரிகிறது. இதற்காக, தமிழில் ‘இந்தி வாழ்க’ மற்றும் ‘டெல்லி ரயில் நிலையம்’ என பெயர் பொறிக்கப்பட்ட பழையகால பேருந்து ஒன்றையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் நேர்காணல் ஒன்றில் பேசியபோது, ”ஆர்ஆர்ஆர் திரைப்படம்போல் பராசக்தி பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. பீரியட் படமாக எடுக்கப்பட்டு வருவதால் அந்தக் காலகட்டத்தைக் காட்சிப்படுத்துவதற்காக பல இடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை இன்று நடக்கும் அரசியல் சூழல்களுக்கு பொருந்தும்படியாக இருக்கும். பராசக்தியை 2026 பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.