செய்திகள்

டிக்கெட் முன்பதிவிலேயே ரூ. 60 கோடி வசூலித்த எம்புரான்!

எம்புரான் டிக்கெட் முன்பதிவு வசூல்...

DIN

எம்புரான் திரைப்படம் டிக்கெட் முன்பதிவில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது.

நடிகர் பிருத்விராஜ் இயக்கிய எம்புரான் திரைப்படம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்கங்களில் வெளியாகிறது. லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இதில் நாயகனாக மோகன்லாலும் முக்கிய கதாபாத்திரங்களில் டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது, இயக்குநர் பிருத்விராஜிடம், “எம்புரான் திரைப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவில் இதுவரை 6.5 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. இது, பாலிவுட்டில்கூட நடந்ததில்லை. எப்படி உணர்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பிருத்விராஜ், “லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரியும். ஆனால், இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. டிக்கெட் முன்பதிலேயே உலகளவில் ரூ. 60 கோடி வரை எம்புரான் வசூலித்துவிட்டதாக என் தயாரிப்பாளர் அழைத்துச் சொன்னார். இப்படம் இன்னும் நிறைய ஆச்சரியங்களைச் செய்யும் என நினைக்கிறோம்." எனத் தெரிவித்தார்.

எம்புரான் திரைப்படம் வணிக ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தலாம் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரப்பெற்றோம் (13-10-2025)

மரகதம்... சானியா ஐயப்பன்!

இடைத்தேர்தல்: மகந்தி சுனிதா வேட்புமனு தாக்கல்!

விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்கி மேலாளரே மோசடியில் சிக்கினார்! ரூ. 13 லட்சம் இழப்பு!!

தமிழகத்தில் 3 நாள்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

SCROLL FOR NEXT