செய்திகள்

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இளையராஜா வழிபாடு!

மூகாம்பிகை கோயிலில் இளையராஜா வழிபாடு தொடர்பாக...

DIN

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று(மார்ச் 24) வழிபாடு மேற்கொண்டார்.

கர்நாடக மாநிலம், கொல்லூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது மூகாம்பிகை தேவியின் ஆலயம். சக்தி பீட வரிசையில் 3வது பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் வலது அக்குள் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.

கொல்லூரில் வீற்றிருக்கும் அன்னையின் திருநாமம் மூகாம்பிகை என்றும், இறைவன் க்ரோதீஸ்வர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

இதையும் படிக்க: கடவுள் சரியாகத்தான் இருக்கிறார்; சில மனிதர்கள்தான் சரியில்லை: நீதிபதிகள்

பரசுராமரால் அன்னை பார்வதி தேவிக்காக அமைக்கப்பட்ட ஒரே கோவிலாகக் கருதப்படுகிறது. இங்கே அன்னை பார்வதி தாய் மூகாம்பிகையாக வழிபடப்படுகிறாள். செளபர்ணிகா நதிக்கரையில் அமைந்துள்ள அன்னையின் இந்த ஆலயம், தமிழ்நாடு, கேரளம், கர்நாடக மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று(மார்ச் 24) பிரார்த்தனை மேற்கொண்டார்.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னதாக, லண்டனில் உள்ள எவெண்டிம் அப்பல்லோ அரங்கில் இளையராஜாவின் சிம்பொனி நிகழ்ச்சி நடைபெற்றது. ராயல் ஃபில்ஹாா்மோனிக் இசைக் குழுவுடன் இணைந்து அரங்கேற்றம் செய்யப்பட்ட ‘வேலியண்ட்’ என்ற தலைப்பிலான சிம்பொனி இசையைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்தனா்.

இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 வெண்கல பதக்கங்களுடன் நிறைவு செய்த மனு பாக்கர்!

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு!

பசியின் கோரம்! காஸாவில் குழந்தைகள் அழுவதற்குக்கூட முடிவதில்லை!

என்ன பார்வை... சைத்ரா!

இந்தியாவுக்கு 50% வரி உக்ரைன் போருக்கானது போல இல்லை: டிரம்பை சாடும் ஜனநாயகக் கட்சி

SCROLL FOR NEXT