ரிது வர்மா 
செய்திகள்

பிரபல நடிகரைக் காதலிக்கும் ரிது வர்மா?

காதலில் ரிது வர்மா...

DIN

நடிகை ரிது வர்மா பிரபல நடிகரைக் காதலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரிது வர்மா. தமிழில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான இவர் நித்தம் ஒரு வானம், மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றார்.

இவர் நடிகர் விக்ரமுடன் நடித்த துருவ நட்சத்திரம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், ரிது வர்மா தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜை காதலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிரஞ்சீவியின் சகோதரி மகனான வைஷ்ணவ் தேஜ் உப்பென்னா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தற்போது, தொடர்ந்து நடித்து வருகிறார்.

ரிது வர்மா - வைஷ்ணவ் தேஜ்

இவரும் ரிது வர்மாவும் இணைந்து எந்தப் படத்திலும் நடித்ததில்லை. ஆனால், நண்பர்களின் விருந்துகளில் சந்தித்து நண்பர்களானதாகவும் பின் சில மாதங்களாக இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இருவரும் திருமணம் செய்துகொள்ளும் திட்டத்திலும் இருக்கிறார்களாம்.

நடிகர் வைஷ்ணவ் தேஜ்ஜை விட ரிது வர்மா 5 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

முதல்வர் ஸ்டாலின், உதயநிதியின் தொகுதிகளில் 1.93 லட்சம் வாக்குகள் நீக்கம்!

SCROLL FOR NEXT