முகப்பு
செய்திகள்

சோனு சூட் மனைவி கார் விபத்தில் படுகாயம்!

சோனு சூட் மனைவி கார் விபத்தில் படுகாயமடைந்தது பற்றி...

Updated On : 25 மார்ச், 2025 at 10:56 AM
சோனு சூட், அவரது மனைவி சோனாலி சூட்.
பகிர்:

பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மனைவி சோனாலி சூட் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் திங்கள்கிழமை இரவு படுகாயம் அடைந்தார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை - நாக்பூர் நெடுஞ்சாலையில் நேற்றிரவு 10.30 மணியளவில் சோனாலி சூட் ஓட்டிச் சென்ற கார் லாரியின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் சென்ற சோனாலி சூட்டும், அவரது உறவினரும் படுகாயமடைந்த நிலையில், சோனாலியின் தங்கை சுனிதா சிறிய காயங்களுடன் தப்பினார்.

படுகாயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் உடல்நிலைக் குறித்து 72 மணிநேர கண்காணிப்புக்கு பிறகே தகவல் தெரிவிக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தை சோனு சூட் உதவியாளர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும், சோனாலி உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தற்போது உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →