பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் முதன்முதலாக இயக்குநராக களமிறங்குகிறார்.
குழந்தை நட்சத்திரமாக இருந்து பின்னர் பாலிவுட்டில் 2000-இல் நடிகராக அறிமுகமான ஹிருத்திக் ரோஷன் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார்.
கடைசியாக 2024இல் ஃபைட்டர் எனும் படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து வார் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கிரீஷ் 4 படத்தின் மூலம் இயக்குநராக தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார்.
சூப்பர் ஹூரோ படத்தை இயக்குகிறார்
2006இல் தொடங்கிய கிரீஷ், 2013இல் கிரீஷ் 3 வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
பாலிவுட்டில் பிரபலமான சூப்பர் ஹீரோ கதையான கிரீஷ் படத்தின் 4ஆவது பாகமான கிரீஷ் 4 படத்தை யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. இவர்களுடன் ஃபிலிம்கிராப்ட் புரடக்ஷன்ஸும் தயாரிக்கிறது.
இந்தப் படம் 2026-இல் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கிரீஷ் 3 பாகங்களையும் இயக்கியது இவரது தந்தை ராகேஷ் ரோஷன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ராகேஷ் ரக்ஷன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
கிரீஷ் படத்தினை இயக்கும் கைத்தடியை எனது மகனிடம் அளிக்கிறேன். இந்தப் படம் என்னுள் தோன்றியதில் இருந்து ஹிருத்திக் என்னுடன் இருக்கிறான். இந்தப் படத்தை அடுத்த பத்தாண்டுகளுக்கு முன்னோக்கி எடுத்துச்செல்ல அவரிடம் ஆர்வமும் நோக்கமும் இருக்கிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு நான் உன்னை நடிகராக அறிமுகப்படுத்தினேன். தற்போது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு நீ இயக்குநராக வளர்ந்துள்ளாய்.
இந்தப் புதிய அவதாரத்துக்கு வாழ்த்துகளும் ஆசியும் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.