விஜே சித்து  
செய்திகள்

நாயகனாகும் விஜே சித்து!

விஜே சித்து நாயகனாக நடிப்பதாகத் தகவல்...

DIN

பிரபல யூடியூபர் விஜே சித்து நாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யூடியூபில் விஜே சித்து விலாக்ஸ் (vj siddhu vlogs) மூலம் பிரபலமானவர் விஜே சித்து. சின்னத்திரை தொகுப்பாளராகவும் பணியாற்றிய இவர் சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பிரபலமானவராக இருக்கிறார்.

அண்மையில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற டிராகன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், வேல்ஸ் இண்டர்னேஷனல் தயாரிப்பில் விஜே சித்து புதிய படத்தை இயக்கி நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜே சித்து குழுவைச் சேர்ந்த ஹர்ஷத் கான் என்பவர் டிராகன் படத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT