விக்ரம்.  
செய்திகள்

திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா விஜயன்

நத்தம் அருகே நத்தமாடிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நேரில் கண்டு மகிழ்ந்தனர்.

DIN

நத்தம் அருகே நத்தமாடிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் விக்ரம், நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நேரில் கண்டு மகிழ்ந்தனர்.

விக்ரம் - அருண் குமார் கூட்டணியில் உருவான வீர தீர சூரன் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.திட்டமிட்ட நாளில் தாமதமாகத் திரைக்கு வந்தாலும் முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான வீர தீர சூரன் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், இப்படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

ரூ. 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெறும் என்றே தெரிகிறது. இந்தநிலையில் படத்தை விக்ரம் தமிழகம் முழுவதும் சென்று விளம்பரப்படுத்தி வருகிறார். இதனிடையே திண்டுக்கல் சென்றிருந்த விக்ரம் உமா ராஜேந்திரா திரையரங்கத்தில் ரசிகர்களுடன் அமர்ந்து நேற்று படம் பார்த்தார்.

சர்தார் - 2 அறிமுக புரோமோ!

தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல் நத்தம் அருகே நத்தமாடிப்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியை அவர் நேரில் கண்டு ரசித்தார். உடன் படத்தின் நாயகி துஷாரா விஜயனும் இருந்தார். அப்போது பேசிய விக்ரம், முதன்முதலில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். உண்மையிலேயே நான் வீர தீர சூரன் அல்ல. நிஜமான வீர தீர சூரர்கள் யார் என்றால் நீங்கள்தான்.

இந்த காளைகளை அடக்கும் வீரர்கள்தான் நிஜமான வீர தீர சூரர்கள் என்றார். துஷாரா விஜயன் பேசுகையில், இது நம்ம ஊர் திருவிழா, அதனால்தான் நேரில் வந்துள்ளேன். இவ்வாறு கூறினார். இதுதொடர்பான புகைப்படம் மற்றும் விடியோக்கள் தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலா் கண் நோய் - விழிப்புடன் தவிா்ப்போம்!

பெண் குழந்தைகளை பாதுகாப்போம்!

எல்லை பிரச்னைக்கு மத்தியிலும் சீனாவுடன் அதிகரிக்கும் வா்த்தகம்!

மாயா முன்னேற்றம்

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி பரிசு! இதுவரை இல்லாத அதிகபட்சம்!

SCROLL FOR NEXT