சுகபோகங்களில் மனஞ்செலுத்த மாட்டார்
உயிர் போய்விட்டவர்களுடைய வெண்மையான தலை எலும்புகள், பிறர் அச்சம் கொள்ளும்படியாகச் சிரித்துச் செம்மாந்து, உடலின்பத்திலே மூழ்கியிருப்பவரின் இறுமாப்பாகிய குற்றத்தைத் தீர்க்கும்.
உயிர்போயார் வெண்தலை உட்கச் சிரித்துச்,
செயிர்தீர்க்கும், செம்மாப் பவரைச்;-செயிர்தீர்ந்தார்
கண்டு, 'இற்றிதன் வண்ணம்' என்பதனால்,
Advertisement
பண்டத்துள் வைப்பது இலர்.
(பாடல் 50 அதிகாரம்: தூய்து அன்மை)
உயிர் போய்விட்டவர்களுடைய வெண்மையான தலை எலும்புகள், பிறர் அச்சம் கொள்ளும்படியாகச் சிரித்துச் செம்மாந்து, உடலின்பத்திலே மூழ்கியிருப்பவரின் இறுமாப்பாகிய குற்றத்தைத் தீர்க்கும்.
ஆதலால், அப்படிக் குற்றம் தீர்ந்தவர்கள் 'இதன் குணம் இப்படிப்பட்டது' என அறிந்து உடலைப்பற்றித் தெரிந்து கொள்வதனால், தம் உடலை ஒரு பொருளாகக் கருதிப் பேணிப் புனைந்துவைக்க மாட்டார்கள்.
'உடலின் தன்மையை அவர்கள் உணர்ந்து விடுவதனால் அதனை ஒரு பொருளாகக் கருதி, அதன் சுகபோகங்களிலே மனஞ்செலுத்த மாட்டார்கள்.'