குட் பேட் அக்லி படத்தில் அஜித் குமார் 
செய்திகள்

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஓடிடி வெளியீடு!

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து...

DIN

நடிகர் அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில் உருவான ‘குட் பேட் அக்லி’ எனும் திரைப்படம் கடந்த ஏப்.10 ஆம் தேதியன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இதுவரை காணாத மாறுபட்ட தோற்றத்தில் அஜித் குமார் நடித்திருந்தது அவரது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் இந்தப் படம் வெளியான 2 வாரங்களில் சுமார் ரூ.250 கோடி வசூலித்ததாகக் கூறப்பட்டது.

இத்துடன், தமிழ்நாட்டில் மட்டும் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்தப் படத்தில் நடிகர்கள் அர்ஜுன் தாஸ், சுனில், திரிஷா, சிம்ரன், பிரபு, பிரசன்னா, ஜாக்கி ஷரோஃப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகள், பிரபல பாடல்களின் ரீ-கிரியேஷன் என ரசிகர்களைக் கவர்ந்திழுத்த இந்தப் படம் தற்போது ஓடிடி-யில் வெளியாகவுள்ளது.

வரும் மே.8 ஆம் தேதியன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரெட்ரோ விழாவில் அவதூறு பேச்சு? நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT