சூர்யா 
செய்திகள்

மகளின் குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன்: சூர்யா

தன் மகள் குறித்து சூர்யா...

DIN

நடிகர் சூர்யா தன் மகள் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் வியாழக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 60 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தில் இடம்பெற்ற கனிமா பாடல் மற்றும் சில ஆக்சன் காட்சிகள் சுவாரஸ்யமாக இருந்ததால் இப்படம் இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடி வசூலைக் கடக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, படத்தின் புரமோஷனுக்காக சூர்யா, கார்த்திக் சுப்புராஜ், சந்தோஷ் நாராயணன் மூவரும் இணைந்து கலந்துரையாடல் செய்த விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது.

அதில், சூர்யாவிடம் இசை மேல் உங்களுக்கு ஆர்வம் உண்டா என கார்த்திக் சுப்புராஜ் கேட்டார்.

அதற்கு சூர்யா, “நிறைய பாடல்களைக் கேட்பேன். குறிப்பாக, சோகப் பாடல்களைக் கேட்கப் பிடிக்கும். என் மகள் மேல் படிப்பிற்காக அமெரிக்கா செல்கிறார். அதனால், அண்மை காலமாக சித்தா படத்தில் இடம்பெற்ற, ‘என் பார்வை உன்னோடு’ பாடலைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

ஒருநாள் ரெட்ரோ படப்பிடிப்பின்போது அதிகாலை 3 மணிக்கு என் மகளிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. அப்போது, அப்பாடலைத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். திடீரென அந்த வேளையில் மகளிடமிருந்து வந்த எதிர்பாராத குறுஞ்செய்தியால் நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தேன். பாடல்கள் நம் வாழ்க்கையுடன் தொடர்புடைய நினைவுகளாகவும் நீடிக்கக்கூடியவை” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT