தன் மனைவி சாந்தியுடன் கவுண்டமணி 
செய்திகள்

நடிகர் கவுண்டமணியின் மனைவி காலமானார்!

கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்...

DIN

நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவால் காலமானார்.

தமிழின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான கவுண்டமணி தற்போது வயது மூப்பு காரணமாக திரைப்படங்களில் நடிக்காமல் ஓய்வு எடுத்து வருகிறார்.

இறுதியாக, இவர் நடித்த ஒத்த ஓட்டு முத்தையா கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், திரைப்பட நிகழ்வுகளில் கலந்துகொள்வதையும் தவிர்த்தே வருகிறார்.

இந்த நிலையில், கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

சென்னை தேனாம்பேட்டையிலுள்ள கவுண்டமணியின் இல்லத்தில் இறுதிச் சடங்குகளுக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்துவருபவர் கவுண்டமணி. அவர் மனைவியின் மறைவுக்குத் திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் வீட்டில் இதற்கு மேல் என்னால் வாழ முடியாது! கதறிய போட்டியாளர்!

பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

ஆஸ்திரேலியாவில் சாகச பயணம்... காஜல் அகர்வால்!

ஆந்திரத்தில் ஒருங்கிணைந்த நடவடிக்கை: 50 மாவோயிஸ்ட்கள் கைது!

ஆர்சிபியை வாங்க முனைப்புக் காட்டும் கேஜிஎஃப், காந்தாரா படத் தயாரிப்பு நிறுவனம்!

SCROLL FOR NEXT