மும்பையில் உடல்நலக்குறைவால் மகாராஷ்டிர பாஜக முன்னாள் அமைச்சர் ராஜ் கே புரோஹித் சனிக்கிழமை காலமானார்.
பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரத்தின் முன்னாள் அமைச்சருமான ராஜ் கே புரோஹித் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 71. மும்பை பாஜக வட்டாரங்களில் நன்கு அறியப்பட்ட நபரான இவர், கட்சியின் நகரத் தலைவராகவும், மகாராஷ்டிர அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
மேலும் 2014-19 க்கு இடையில் சட்டப்பேரவையில் பாஜகவின் தலைமை கொறடாவாகவும் இருந்துள்ளார். எனினும், 2019 மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட புரோஹித்துக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
ராஜ் கே புரோஹித் மறைவுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புரோஹித்தின் மறைவு குறித்து அறிந்து வேதனை அடைந்ததாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே தெவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.