வெங்கட் ராஜ்  
செய்திகள்

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் காலமானார்!

லொள்ளு சபா வெங்கட் ராஜ் மறைந்தார்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் லொள்ளு சபா வெங்கட் ராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் வெங்கட் ராஜ் (68). அந்நிகழ்ச்சியில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து பல காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார்.

தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நடித்த மனிதன், நடிகர் சந்தானத்தின் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், டிக்கிலோனா உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.

இந்த நிலையில், நுரையீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெங்கட் ராஜ் நேற்று (ஜன. 4) மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவிடம் 5 தொகுதிகள் கேட்டுள்ளோம் - காதர் மொகிதீன்

50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

திமுக கூட்டணி : எந்தெந்த தேதிகளில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை! - முழு விவரம்

SCROLL FOR NEXT