செய்திகள்

தீபாவளி வெளியீடாக சூர்யா - 45?

சூர்யா - 45 வெளியீடு குறித்து...

DIN

நடிகர் சூர்யாவின் 45-வது படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்ற வழக்கை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், த்ரிஷா, ஸ்வாசிகா, இந்திரன்ஸ், காளி வெங்கட், நட்டி, சிவதா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் அறிமுகமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

படத்தின் படப்பிடிப்பு கோவை, சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில், சூர்யாவுடன் த்ரிஷா நடனமாடும் பிரம்மாண்ட பாடல் காட்சி ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தை இந்தாண்டு தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படமும் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவிற்காக வாக்குக் கேட்பேன்! விஜய் நாகரிகமாகப் பேச வேண்டும்! ஓபிஎஸ் பேட்டி

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு! ஐடி ஊழியரை தாக்கிய விவகாரம்!

SCROLL FOR NEXT