நவாசுதீன் சித்திக் 
செய்திகள்

தென்னிந்தியப் படங்களை காப்பி அடிக்கிறது பாலிவுட்: நவாசுதீன் சித்திக்

பாலிவுட் குறித்து நவாசுதீன் சித்திக்...

DIN

நடிகர் நவாசுதீன் சித்திக் பாலிவுட் திரைத்துறை மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

பாலிவுட்டில் சாதாரண நடிகராக அறிமுகமாகி தனது நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் நவாசுதீன் சித்திக்.

வித்தியாசமான கதைக்கரு கொண்ட படங்களாகத் தேர்ந்தெடுத்து அதில் நடிப்பிற்கு வேலையுள்ள கதாபாத்திரத்தில் நடிப்பார். ஹிந்தி திரையுலகில் பிரபலமான இவர் தமிழில் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.

தற்போது, இவர் நடிப்பில் உருவான கோஸ்டா திரைப்படம் ஜீ5 ஓடிடியில் வெளியாகியுள்ளது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி 1990-ல் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் தங்கக் கடத்தலை தடுக்க முயன்ற சுங்க அதிகாரியின் கதாபாத்திரத்தில் நவாசுதீன் நடித்திருக்கிறார்.

படத்தின் புரமோஷன் நிகழ்வில் பேசிய நவாசுதீன், “பாலிவுட் சினிமாவில் உண்மைத்தன்மை இல்லை. முக்கியமாக, ஹிந்தி திரைப்படங்களில் நல்ல கதைகளும் படைப்பாற்றலும் இல்லை. தற்போது, பெரும்பாலும் தென்னிந்திய திரைப்படங்களை காப்பி அடிக்கின்றனர். வெற்றி பெறுவதற்கான சூத்திரங்களைக் கொண்டு ஹிந்தியில் படங்களை எடுக்க முயற்சிக்கின்றனர். வெற்றிப் பெற்றால் அடுத்தடுத்த பாகங்களுக்குச் செல்கின்றனர்.

கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் படத்தில் நவாசுதீன் சித்திக்

மேலும், ஒரே மாதிரியான காட்சிகளையும் திரும்பத் திரும்ப திருடி எடுக்கின்றனர். திருடுபவர்களால் படைப்பாளியாக இருக்க முடியுமா? இதனால், படைப்புத் திறனுக்கான வேலையே இல்லாமல் ஆகிவிட்டது. இப்படியே இருந்தால் நல்ல படங்களைக் கொடுத்த அனுராக் காஷ்யப்பைப் போல பல நடிகர்களும் இயக்குநர்களும் பாலிவுட்டை விட்டு வெளியேறுவார்கள்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை துறைமுகத்துக்கு வந்த அமெரிக்க கடற்படை கப்பல்

அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

ஜம்மு-காஷ்மீரில் கடும் வெள்ளம்: 11 போ் உயிரிழப்பு; 14 போ் காயம்

பெரம்பலூரில் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்

பொள்ளாச்சி ஜெயராமன் குறித்து அவதூறு: 8 யூடியூப் சேனல்களுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT