‘கூலி’ திரைப்படத்தின் க்ளிம்ஸ் விடியோ வெளியீடு 
செய்திகள்

‘கூலி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படத்தின் புதிய அப்டேட் குறித்து...

DIN

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கூலி’ படத்தின் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான ‘கூலி’-ஐ பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட நாள் முதல் சினிமா ரசிகர்களிடையே வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அனிருத் ரவிச்சந்திரனின் இசையில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்துடன், பாலிவுட் நடிகர் அமீர் கான் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்தத் திரைப்படத்துக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

முன்னதாக, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கூலி’ வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 100 நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் ’100 டேஸ் டூ கோ’ எனக் குறிப்பிட்டு கிளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிக்க: ரெட்ரோ வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 22 பேர் குற்றவாளி

நித்ய கன்னி... மனு பாக்கர்!

SCROLL FOR NEXT