நடிகை சிம்ரன். 
செய்திகள்

அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துகள்: நடிகை சிம்ரன்

சென்னை விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் பேட்டி.

DIN

அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துகள் என்று நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடிகை சிம்ரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

”டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி அடைந்தது மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. என்னுடைய 30 வருட திரைத்துறை வாழ்க்கையில் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த படம்.

பெண் கதாநாயகி படங்களில் நல்ல கதையம்சம் கொண்டதாக இருந்தால் பண்ணலாம். அரசியலுக்கு வந்த விஜய்க்கு வாழ்த்துக்கள்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் உள்ளது. எல்லாம் சரியாக போய் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் மனித நேயம்தான் ஜெயிக்க வேண்டும்.

80ம் ஆண்டுகளில் இருந்த கதாநாயகிகள் மீண்டும் சினிமாவிற்கு வருவது நல்லதுதானே. பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

மேலும் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, “விஜய் அரசியல் தொடர்பான கேள்வியை தவிர்த்துக் கொள்ளுங்கள். சரியான நேரம் வரும் போது நானே சொல்கிறேன்” என்று பதிலளித்தார்.

இதையும் படிக்க: கேளிக்கை வரி மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT