செய்திகள்

பிரபல தமிழ் நடிகருக்கு அப்பாவாக நடிக்கும் மோகன்லால்?

மோகன்லாலின் தமிழ்ப்படம் குறித்து...

DIN

பிரபல நடிகருக்கு அப்பாவாக நடிக்க நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மோகன்லால் எம்புரான், துடரும் படங்களின் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கிறார். அடுத்ததாக, இவர் நடிப்பில் ஹிருதயப்பூர்வம் வெளியாகவுள்ளது. சத்யன் அந்திக்காடு இயக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடிக்கிறார்.

தொடர்ந்து, தமிழில் நடிகர் ரஜினிகாந்துடன் ஜெயிலர் - 2 படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், குட் நைட் படத்தின் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்குவதாகவும் இப்படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜில்லா படத்தில் நடிகர் விஜய்க்கு தந்தையாக நடித்த மோகன்லால் சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

நடிகர் சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படங்களைப் பயன்படுத்தத் தடை!

தங்கம் விலை மீண்டும் பவுனுக்கு 800 உயர்வு!

வங்கக் கடலில் புயல்! மீனவர்கள் கரை திரும்புக: கடலோர காவல்படை எச்சரிக்கை!!

கரூர் கூட்ட நெரிசல் பலி: வங்கி கணக்கில் மத்திய அரசின் ரூ. 2 லட்சம் நிதி!

SCROLL FOR NEXT