செய்திகள்

ரூ. 100 கோடி இழப்பீடு வேண்டும்... சிக்கலில் சந்தானம் படம்!

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் பாடல் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது...

DIN

நடிகர் சந்தானத்தின் புதிய படத்திற்கு பெரிய சிக்கல் எழுந்துள்ளது.

சந்தானம் கதாநாயகனாக நடித்து, பிரேம் ஆனந்த் இயக்கிய ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களது கூட்டணியில் உருவான புதியபடம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.

நடிகர் ஆர்யாவின் ‘தி ஷோ பீப்பள்’ நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப்படம் மே 16 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் இடம்பெற்ற கிசா - 47 பாடலில் பெருமாளைக் குறித்து எழுதப்பட்ட ‘கோவிந்தா கோவிந்தா’ எனும் வரி பிரபல பக்திப் பாடலின் ராகத்தைப் போன்றே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இந்து மத நம்பிக்கைகளைப் புண்படுத்தவதாகக் கூறி சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினரான பானுபிரகாஷ் ரெட்டி என்பவர், “டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்ற பாடலில் ’கோவிந்தா... கோவிந்தா’ என்கிற வரி பக்தர்களின் மனதைக் கடுமையாக புண்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு நாத்திக அரசு என்பதால் இப்பாடலைக் கண்டுகொள்ளவில்லை. இதனால், நாங்கள் சந்தானம் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக ரூ. 100 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். இதுகுறித்து அவர்கள் 15 நாள்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் இல்லையென்றால் கிரிமினல் வழக்கு தொடர்வோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

டிடி நெக்ஸ்ட் லெவல் நாளை மறுநாள் ( மே. 16) வெளியாகவுள்ள நிலையில் இந்த நோட்டீஸ் படக்குழுவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சப்தமே இல்லாமல் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி!

அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தினம் தினம் திருநாளே!

மொடக்குறிச்சி அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியா் வீட்டில் 17 பவுன், ரூ.1 லட்சம் திருட்டு

கொள்முதல் நிலையம் திறக்காததால் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைத்து சேதம்

SCROLL FOR NEXT