செய்திகள்

சம்பளத்தை உயர்த்த மாட்டேன்: சசிகுமார்

நடிகர் சசிகுமார் தன் சம்பளம் குறித்து பேசியுள்ளார்...

DIN

நடிகர் சசிகுமார் தன் சம்பளத்தை உயர்த்தப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று உலகளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமாகியுள்ளது.

இதுவரை சசிகுமார் நாயகனாக நடித்த படங்களிலேயே இதுவே அதிக வசூலைக் கொடுத்த படமென்பதால் சசி மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் வெற்றிவிழாவில் பேசிய சசிகுமார், “குட்டிப்புலி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்களே நான் நடித்ததிலேயே அதிக வசூலைப் பெற்றிருந்தன. ஆனால், டூரிஸ்ட் ஃபேமிலி இவற்றைக் கடந்துவிட்டது. பலரும் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து என் சம்பளத்தை உயர்த்திவிடுவீர்களா? எனக் கேட்டார்கள். கண்டிப்பாக உயர்த்தமாட்டேன்.

ஏனென்றால், நான் தோல்வியடைந்திருக்கிறேன். டூரிஸ்ட் ஃபேமிலி முதல் நாளில் ரூ. 2 கோடி வரை வசூலித்திருக்கலாம். நான் நடித்த ஒரு படமே ரூ. 2 கோடிதான் வசூலித்திருக்கிறது. ஒரு நடிகரிடம் சரியாக எவ்வளவு வசூலிக்கிறது எனச் சொன்னால்தானே அவர்கள் தங்களின் சம்பளம் குறித்து சிந்திப்பார்கள். “ எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT