நடிகர், ரேஸர் அஜித் குமார். 
செய்திகள்

15 ஆண்டுகளுக்குப் பிறகு ரேஸிங்..! 42 கிலோ எடையைக் குறைத்த அஜித்!

நடிகர் அஜித்குமார் தனது எடை குறைப்பு குறித்து பேசியதாவது...

DIN

நடிகர் அஜித்குமார் 8 மாதங்களில் 42 கிலோ எடையைக் குறைத்தது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

தற்போது பைக் ரேஸிங்கில் முழுமையான கவனத்தை செலுத்தி வருகிறார்.

ரேஸிங்கிற்காக நடிகர் அஜித் உடல் எடையைக் குறைதத்தாகக் கூறியுள்ளது சமூக ஊடகங்களில் வைரலானது. அஜித் பேசியதாவது:

15 ஆண்டுகளுக்குப் பிறகு கார் ரேஸிங்கில் பங்கேற்கிறேன். அதனால் எனக்கு மிகுதியான உடற்தகுதி தேவைப்பட்டது. 8 மாத கால இடைவெளியில் 42 கிலோ எடையைக் குறைத்தேன்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். உணவுமுறை, அளவு கட்டுப்பாடு, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு இதைக் குறைத்தேன்.

நான் ஒரு டீடோட்டலராகவும் சைவ உணவை உண்பவராகவும் மாறிவிட்டேன். ரேஸிங்கிற்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும். அதை நான் தொடர்ந்து செய்வேன். ரேஸிங்கிற்காக திரைப்பட படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன் எனக் கூறினார்.

எனது படங்களில் சண்டையிடுவதும் நான்தான். அதிலும் காயம் ஏற்படுகிறது. அதனால் ஆக்‌ஷன் படங்களில் நடிக்காமல் இருக்க மாட்டேன். அதேபோலதான் ரேஸிங்கிற்கும் உடலும் உள்ளமும் அதிகமான ஈடுபாடு தேவைப்படுகிறது. அதனால், இதில் காயம் ஏற்படுவதை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

SCROLL FOR NEXT