செய்திகள்

விக்ரம் டிரைலர் சாதனையை முறியடித்த தக் லைஃப் டிரைலர்!

விக்ரம் டிரைலர் சாதனையை தக் லைஃப் டிரைலர் முறியடித்துள்ளது...

DIN

தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.

நடிகர் கமல்ஹாசன் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படத்தின் டிரைலர் நேற்று (மே. 17) வெளியானது.

இந்த டிரைலரில் தன் உயிரைக் காப்பாற்றிய சிறுவனை (சிம்பு) கேங்ஸ்டரான ரங்கராய சக்திவேல் (கமல்ஹாசன்) அடைக்கலம் கொடுத்து தன் நிழல்போல் வளர்ப்பதும் பின்பு சிம்புவே கமலுக்கு எதிராகத் திரும்புவதுபோலவும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளன.

இதுவே, படத்தின் கதையை ஊகிக்க வைத்திருப்பதால் இப்படம் நாயகன், செக்கச் சிவந்த வானம் பாணியில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், டிரைலர் படத்தின் மீதான ஆவலைத் தூண்டியுள்ளது.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் இறுதியாக நாயகனாக நடித்த விக்ரம் திரைப்படத்தின் டிரைலர் வெளியான 24 மணிநேரத்தில் 1.2 கோடி பார்வைகளைக் கடந்திருந்தது. தற்போது, தக் லைஃப் 24 மணி நேரத்திற்குள்ளாகவே 1.8 கோடி பார்வைகளைப் பெற்று விக்ரம் சாதனையை முறியடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT