நிவின் பாலியின் பேபி கேர்ள் டிரைலர்!
நடிகர் நிவின் பாலியின் “பேபி கேர்ள்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...
மலையாள நடிகர் நிவின் பாலியின் நடிப்பில் உருவாகியுள்ள “பேபி கேர்ள்” திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
நடிகர் நிவின் பாலி - இயக்குநர் அருண் வர்மா கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பேபி கேர்ள்”. இந்தப் படம் வரும் ஜன. 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமலு திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சங்கீத் பிரதாப், நடிகை லிஜோமோல் ஜோஸ், அபிமன்யூ திலகன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், க்ரைம் திரில்லர் கதைக்களத்துடன் உருவாகியுள்ள “பேபி கேர்ள்” படத்தின் டிரைலரை இன்று (ஜன. 16) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
முன்னதாக, நடிகர் நிவின் பாலி நாயகனாக நடித்து கடந்த டிச. 25 அன்று வெளியான “சர்வம் மாயா” திரைப்படம் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The trailer for the film “Baby Girl,” starring Malayalam actor Nivin Pauly, has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.