செய்திகள்

நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை இவரா?

விஷால் பிரபல நடிகையைத் திருமணம் செய்யவுள்ளாராம்....

DIN

நடிகர் விஷால் திருமணம் செய்யவுள்ள நடிகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் இறுதியாக மத கஜ ராஜா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது.

இப்படத்தைத் தொடர்ந்து விஷால் நடிக்கும் புதிய படம் இன்னும் அறிக்கப்படவில்லை. மீண்டும் சுந்தர். சி படத்திலேயே அவர் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய விஷால், “நடிகர் சங்கக் கட்டடத்தைக் கட்டி முடித்ததும் திருமணம் செய்துகொள்வேன் எனத் தெரிவித்திருந்தேன். அதேபோல், இன்னும் 4 மாதங்களில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். ஒருமாதமாகக் காதலித்து வருகிறேன். அப்பெண் யார் என்பதை விரைவில் தெரியப்படுத்துவேன். இக்கல்யாணம் என் பிறந்த நாளான ஆக. 29 ஆம் தேதியன்றும் நடைபெறலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது, விஷால் நடிகை சாய் தன்ஷிகாவைத் திருமணம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அண்மை காலமாக இருவரும் காதலித்து வந்ததாகவும் இருவீட்டிலும் திருமணத்திற்கு சம்மதித்ததாகவும் கூறப்படுகிறது.

சாய் தன்ஷிகா

தஞ்சாவூரைச் சேர்ந்த சாய் தன்ஷிகா பேராண்மை, பரதேசி, மாஞ்சா வேலு, அரவான், கபாலி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றவர்.

இவர் நடிப்பில் உருவான ’யோகி டா’ படத்தின் விழா இன்று (மே. 19) சென்னையில் நடைபெறுகிறது. இதில், சிறப்பு விருந்தினராக விஷால் கலந்துகொள்கிறாராம். நிகழ்விலேயே, இருவரது திருமணமும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஷாலும் சாய் தன்ஷிகாவும் எந்தப் படத்திலும் இணைந்து நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரிப்பு: உச்சநீதிமன்றம் ஆதங்கம்

‘டியூட்’ படப் பாடல்களை நீக்கக் கோரி இளையராஜா வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு

சிவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!

வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு!

இந்தியாவின் உயிர்த்துடிப்பு!

SCROLL FOR NEXT