வினோதினி தொடரில் ஆர்த்திகா இன்ஸ்டாகிராம்
செய்திகள்

நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பு நேரம் அறிவிப்பு!

கார்த்திகை தீபம் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கார்த்திகை தீபம் தொடரின் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆர்த்திகாவின் புதிய தொடர் ஒளிபரப்பாகும் நேரம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கார்த்திகை தீபம் தொடரில் பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்த ஆர்த்திகா, சிறிய இடைவேளைக்குப் பிறகு இத்தொடரில் நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு பிளாக் & ஒயிட் என்ற இணையத் தொடரில் கார்த்திக் உடன் சேர்ந்து நடித்திருந்தார்.

இந்தத் தொடரின் வினோதினி என்ற பெயரிலேயே நடிப்பதாகவும், வாழ்வில் போராடி வெற்றி பெறும் பெண்ணின் பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சமூகத்தில் பெண்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் காரணிகளை எதிர்கொண்டு பொருளாதார சுதந்திரம் பெற எவ்வாறு போராடுகிறாள் வினோதினி என்ற அடிப்படையில் இத்தொடரின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

வினோதினி தொடரில் ஆர்த்திகா

இத்தொடரில் ஆர்த்திகாவுக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்கவுள்ளார். இவர் தெய்வமகள், சுந்தரி உள்ளிட்டத் தொடர்களில் நாயகனாக நடித்து கவனம் பெற்றவர்.

இதனிடையே வினோதினி 2வது தொடரின் முன்னோட்டக் காட்சியை சன் தொலைக்காட்சி வெளியிட்டது. இதில், இத்தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஜீ தமிழ் தொடரில் நாயகனாகும் சன் டிவி நடிகர்!

வினோதினி தொடரில் ஆர்த்திகா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT