இலங்கை ராணி என்று அழைக்கப்படும் நடிகை மாலினி பொன்சேகா நேற்று(மே 24) காலமானார்.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாலினி பொன்சேகா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 1968-ல் திசலியன்சூரியாவின் புஞ்சி பபா என்ற படத்தின் மூலம் இலங்கைத் திரைத்துறையில் தனது நடிப்பு வாழ்க்கைத் தொடங்கினார்.
கடந்த 1978 ஆம் ஆண்டு பைலட் பிரேம்நாத் என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிகர் சிவாஜி கணேசனுடன் நாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.
மேலும் இவர் 'யார் அவள்', 'மல்லிகை மோகினி', 'பனி மலர்' ஆகிய தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து 12 முறை ’சலிம் நீல்சன்’ மக்கள் விருதைப் பெற்று சாதனை படைத்தார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், மறைந்த மாலினி பொன்சேகா உடலுக்கு நாளை(மே 26) சுதந்திர சதுக்கம் கலாசார விவகார அமைச்சகத்தில் முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவிற்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.