செய்திகள்

தெகிடி இயக்குநருடன் மீண்டும் இணையும் அசோக் செல்வன்!

அசோக் செல்வனின் புதிய படம் குறித்து...

DIN

தெகிடி இயக்குநர் இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் 12 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் அறிமுகமானவர், ‘பிட்சா - 2 ‘ மூலம் நாயகன் ஆனார்.

அப்படம் பெரிதாகக் கவனம் பெறவில்லை என்றாலும் அடுத்ததாக, ‘தெகிடி’ என்கிற கிரைம் திரில்லர் படத்தில் நாயகனாக நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றார். பி. ரமேஷ் இயக்கத்தில் உருவான இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றியைப் பெற்றது.

தொடர்ந்து, ’கூட்டத்தில் ஒருவன்’, ‘ஓ மை கடவுளே’ படங்கள் வழியாகத் தன்னை நடிகனாக அசோக் செல்வன் நிலைநிறுத்திக்கொண்டார்.

ஆனால், தெகிடி படம் வெளியாகி 11 ஆண்டுகள் கடந்தும் அப்பட இயக்குநர் ரமேஷ் அடுத்தபடம் இயக்காமல் இருக்கிறார். தெகிடி படத்தை முடித்ததும் அவர் மீண்டும் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அசோக் செல்வன் - ரமேஷ் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவும் கிரைம் திரில்லர் பின்னணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுவெளியீடாகும் அமர்க்களம்!

சேலத்தில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி கிடைக்குமா?

பெண்களுக்கு முதலில் திருமணமா? வேலையா? - சமூக ஊடக கருத்துகளுக்கு உபாசனா பதில்!

அழகுச் சங்கமம்... பாக்யஸ்ரீ போர்ஸ்!

ஓடிடியில் வெளியாகும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வான படம்!

SCROLL FOR NEXT