ஜீ தமிழின் புதிய தொடரில் நாயகியாகும் லாந்தர் பட நடிகை!
லாந்தர் பட நடிகை ஸ்வேதா டோரதி, சின்ன திரையில் நாயகியாக அறிமுகமாகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் லாந்தர் பட நடிகை ஸ்வேதா டோரதி, நாயகியாக நடிக்கவுள்ளார். இத்தொடருக்கு தமிழ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஜீ தமிழில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள வீரா தொடரை தயாரித்துவரும் புளூ புரொடக்ஷன் நிறுவனம் இத்தொடரைத் தயாரிக்கவுள்ளது.
ஜீ தமிழில் மக்கள் மனங்களைக் கவரும் வகையிலான தொடர்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருகின்றன. இல்லத்தரசிகளை மட்டுமின்றி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையிலான திரைக்கதையுடன் தொடர்கள் ஒளிபரப்பாகின்றன.
Advertisement
Advertisement
அந்தவகையில் தமிழ் என்ற புதிய தொடர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் நடிகை ஸ்வேதா டோரதி நாயகியாக நடிக்கிறார். இவர், பார்க், லாந்தர் உள்ளிட்டப் படங்களில் நடித்து கவனம் பெற்றவர்.
தற்போது சின்ன திரையில் முதல்முறையாக நாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் என்ற பாத்திரத்திலேயே ஸ்வேதா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் ஆழமான நடிப்புத் திறமைக்கு ஏற்ப புதிய கதைக்களத்துடன் தமிழ் தொடர் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | சிங்கப் பெண்ணே தொடரில் இணையும் பூஜிதா!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.