நடிகர் கமல் ஹாசனின் பேச்சுக்கு நானி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்காக புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக, ஹிட் - 3 படத்திற்காக நேர்காணலில் பேசிய நடிகர் நானி, “நடிகர் கமல் ஹாசனின் திரைப்படங்களிலிருந்து இன்றைய நடிகர்கள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். விருமாண்டி திரைப்படத்தில் நீதிமன்றத்தில் உறங்கிக்கொண்டிருப்பவர் திடீரென எழுந்து, தன் வாயைச் சரிசெய்வார். கமல்ஹாசன் அந்த அளவிற்கு நுட்பமான நடிகர். ஒரு நடிகராக நான் வியக்கும் காட்சி அது.” என்றார்.
இந்த நிலையில், தக் லைஃப் திரைப்படத்திற்காக நேர்காணலில் பேசிய நடிகர் கமல் ஹாசன், “விருமாண்டி திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை நடிகர் நானி குறிப்பிட்டார். நன்றி நானி எனக் கூறமாட்டேன். நானி என்றாலே போதும். அது அவருக்குப் புரியும்” என்றார்.
இதைக்கண்ட நடிகர் நானி தன் எக்ஸ் தள பக்கத்தில், “போதும் சார். போதும்..” எனத் தன் நெகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: நடிகர் கமல் ஹாசனுக்கு சிவராஜ்குமார் ஆதரவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.