ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், வெப் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
சைலேஜ் கொலனு இயக்கத்தில் நானி நடித்த ஹிட் - 3 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பார்க்கலாம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் நெட்பிளிக்ஸ் நாளை( மே 30) வெளியாகிறது.
இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர்கள் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஜூன் 2ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ரங்காயண ரகு, பாவனா கெளடா நடிப்பில் வெளியான கன்னட மொழிப்படமான அக்னியாதவாசி படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் காணலாம்.
நடிகை தேவயானி பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான நிழற்குடை திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
மதன் குமார், சிவராம், பூஜா உள்ளிட்டோர் நடிப்பில் வானில் தேடினேன் என்ற வெப் தொடர் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளைமுதல் வெளியாகவுள்ளது.
இயக்குநர் துரை கே முருகன் இயக்கத்தில் ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக நடித்த சீரன் திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான வல்லமை திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடியிலும் சுமோ திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் அபிலாஷம் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடியிலும் காணக் கிடைக்கின்றன.
இதையும் படிக்க: ஃபஹத் ஃபாசிலுடன் நடிக்க வேண்டும்: ஆலியா பட்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.