நல்ல படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டியது தனது கடமை என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வருகின்ற ஜூன் 5 ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படத்துக்கான விளம்பரப் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
தொடர்ந்து, மகாராஷ்டிரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று படத்துக்கான விளம்பர நிகழ்வுகளில் நடிகர் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஹைதராபாத் நிகழ்வில் சமீபத்தில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசியதாவது:
“நல்ல படங்களைக் கொடுக்க வேண்டியது எனது கடமை. தெலுங்கு மொழியில் நேரடியாக 15 அல்லது 16 படங்களில் நடித்துள்ளேன்.
அதில், 13 படங்கள் மிகப்பெரிய ஹிட் படங்களானது. படங்களின் வெற்றி நீங்கள் கொடுத்தது. தோல்விகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்
முன்னதாக, இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கமல் கூறியதால், அம்மாநிலத்தில் தக் லைஃப் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.