மாநிலங்களவையில் தமிழனாக பேசினேன்: கமல்ஹாசன்
மாநிலங்களவையில் தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
மாநிலங்களவையில் தமிழனாக நல்ல கருத்துகள் பேசி இருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் தெரிவித்தாா்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நல்ல கருத்து, வாதத்துக்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நான் நல்ல கருத்து பேசியதாக எனக்குத் தோன்றுகிறது. அதை மறுப்பவா்கள், அதை விவாதிக்கட்டும். விவாதத்தில் உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்ளுவாா்கள்.
Advertisement
Advertisement
ஜனநாயக நாட்டில் இப்படிப்பட்ட விவாதங்கள் தொடர வேண்டும். எனது கூட்டணி மொத்த இந்தியாவுடனானது. இந்தியாவின் நலன் தான், எனது நலன். கருத்தியல்தான் முக்கியம். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் கூட்டணி குறித்த இப்போது சொல்ல முடியாது என்றாா் அவா்.
I spoke as a proud Tamil in Parliament, says MNM Leader Kamal Haasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.