FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியபோதே நாடு தோற்றுவிட்டது! கமல் ஹாசன்

போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியபோதே நாடு தோற்றுவிட்டது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளது பற்றி...

Updated On : 23 ஜூலை 2026, 1:15 pm IST
நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன். - கோப்புப் படம்
பகிர்:

போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தியபோதே நாடு தோற்றுவிட்டது என நடிகரும், எம்.பி.யுமான கமல் ஹாசன் வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜந்தர் மந்தரிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் மீது தில்லி காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியும் பேரணியைக் களைத்தனர்.

இதுகுறித்து கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

Advertisement

Advertisement

ஒரு மாணவர் அழும்போதே நாம் கவனித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக பல மாணவர்கள் உயிரிழக்கும் வரை நாம் காத்திருந்தோம். கற்றலுக்குப் பதிலாக பயிற்சியும், ஆர்வத்துப் பதிலாக பதற்றமும், தகுதிக்குப் பதிலாக குற்றச்செயலும் இடம்பெற்ற போதே இந்த அமைப்பு சீர்கெட்டுவிட்டது.

நாட்டின் மாணவர்களுக்கு பதில்களுக்கு மாறாக தடுப்புகளும் தடியடிகளும் கிடைத்தபோதே அந்த நாடு தோல்வி அடைந்துவிட்டது.

சோனம் வாங்சுக், நீங்கள் நாட்டுக்குத் தேவைப்படுகிறீர்கள். எனவே, இந்தியாவின் மாணவர்களுக்காக உங்களுடைய உண்ணாவிரதத்தை நீங்கள் முடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் எங்களுக்கு மிகவும் சிறப்பானவர். உங்களது வேலையை நீங்கள் செய்து முடித்து விட்டீர்கள். நாடு உங்களுக்குத் தன் கடமையைச் செய்ய வேண்டிய நேரம் இது. எங்களுடைய தோல்விகளை விட உங்களுடைய கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்று கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

சிஜேபியினரின் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து லடாக்கைச் சேரந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த ஜூன் 28 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Actor and MP Kamal Haasan stated on Thursday (July 23) that the nation failed the moment a lathi-charge was carried out against the protesting students.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments