FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கமல் ஹாசன் - சு. அருண் குமார் திரைப்படத்தின் பணிகள் தொடக்கம்!

நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்படத்திற்கான தோற்றப் புகைப்படம்...

3 செப்டம்பர் 2026, 11:53 am IST
கமல் ஹாசன் - சு. அருண் குமார்
பகிர்:

நடிகர் கமல் ஹாசன் இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் புதிய திரைப்படம் உருவாகிறது.

நடிகரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல் ஹாசன் தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கத்தில் தன் 234-வது படத்தில் நடிக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், தேர்தல் காரணங்களால் அப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிச் சென்றது.

தொடர்ந்து, ராஜ்கமல் நிறுவனம் நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது படத்தையும் நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சித்தா திரைப்படத்தை இயக்கிய சு. அருண் குமார் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது, இத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் கமல் ஹாசன் இப்படத்தில் எப்படி தோன்ற வேண்டும் என்பதற்கான ’லுக் டெஸ்ட்’ எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கையில் வெட்டு கத்தியுடன் நடிகர் கமல் நடப்பது போன்ற புகைப்படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது, காவல்துறை சார்ந்த படமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதனை, ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

இயக்குநர் சு. அருண் குமார் இறுதியாக இயக்கிய வீர தீர சூரன் திரைப்படம் கலவையான விமர்சங்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

A new film starring actor Kamal Haasan is being made under the direction of Arun Kumar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments