மகன் யாத்ராவுடன் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 
செய்திகள்

நானும் அம்மாவும் பெருமையடைகிறோம்... மகனை வாழ்த்திய தனுஷ்!

உயர்கல்வியை நிறைவு செய்த தனுஷ் மகன்...

DIN

தன் மகன் உயர்கல்வியை முடித்ததற்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர் படப்பிடிப்பிலேயே இருக்கிறார். இவர் நடிப்பில் உருவான குபேரா, இட்லி கடை படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. தற்போது, ஹிந்தியில் தேரே இஸ்க் மெய்ன் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக, கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார். இதனால், அடுத்த சில ஆண்டுகளுக்கு தனுஷ் பிசியாகவே இருப்பார்.

இந்த நிலையில், தனுஷின் மூத்த மகன் யாத்ரா தன் உயர்கல்வியை நிறைவு செய்திருக்கிறார். இதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தனுஷ் தன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து கலந்துகொண்டு மகனை வாழ்த்தியிருக்கிறார்.

இதுகுறித்து, இஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்ட தனுஷ், “பெருமைமிகு பெற்றோர்” எனப் பதிவிட்டுள்ளார். விவாகரத்து பெற்றிருந்தாலும் மகன்கள் விஷயத்தில் தனுஷும் ஐஸ்வர்யாவும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT