நடிகர் அஜித் குமார் தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் தற்போது முழுநேரமாக கார் பந்தயத்திற்கான பயிற்சிகளிலும் போட்டிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியாவில் கார் ரேசிங்கை பிரபலப்படுத்தும் முயற்சிகளையும் வாய்ப்பு கிடைக்கும்போது செய்கிறார்.
இந்த நிலையில், நீண்ட காலம் கழித்து சினிமா மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து நேர்காணலை அளித்துள்ளார்.
முக்கியமாக அஜித், “நான் நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவன். அதனால், சிறு வயதிலேயே எனக்கு அவர்கள் சமைக்கக் கற்றுக் கொடுத்தனர். நிறைய முறை நான் சமையலறையில் நின்ற நினைவு இருக்கிறது. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்னால் என்னைச் சந்தித்திருந்தால் வெறுத்திருப்பீர்கள். காரணம், அன்று எனக்கென ஒரு குழு இருந்தது. என் அனைத்து தனிப்பட்ட பணிகளையும் அவர்கள் செய்தார்கள். அவர்களுக்குள் எழும் சண்டை சச்சரவுகளைப் பேசி, சரி செய்வதில் நிறைய நேரத்தை வீணடித்துவிட்டேன் எனத் தோன்றுகிறது.
அதற்காக, இப்போது வெட்கப்படுகிறேன். நான் ஒருவரைத் துணைக்கு வைத்துக் கொள்வதைத் தவறு எனச் சொல்லவில்லை. உங்களின் அன்றாட விஷயங்களைக் கற்றுக்கொண்டால் இக்கட்டான நேரங்களில் சமாளித்துக்கொள்ளலாம்.
இப்போது நான் சுயமாக இருக்கிறேன். அதனாலேயே விலகியும் இருக்கிறேன். ரசிகர்களிடமிருந்து வரும் பாராட்டுகளையும் புகழையும் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், புகழ் ஒரு போதை. அதனால், அதைத் தொட மாட்டேன். என் கடந்தகால அனுபவங்களிலிருந்து அதில் எச்சரிக்கையுடன் இருக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்தின் பண்பட்ட பேச்சு பலரிடமும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இதையும் படிக்க: மறுவெளியீட்டில் வசூலை வாரிக்குவிக்கும் பாகுபலி: தி எபிக்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.