இளம் நடிகையொருவர் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தொடர் வெற்றிப்படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகியுள்ளார். வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றுள்ளார் என்பதால் இவரின் அடுத்தடுத்த படங்களின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேநேரம், மாரி செல்வராஜ் தன் திரைப்படங்களில் மலையாள நடிகைகளை அதிகம் பயன்படுத்துவது குறித்து கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு மாரி செல்வராஜ், ‘தமிழ், மலையாளம் என்றில்லை. யாரிடம் அர்ப்பணிப்பு அதிகமாக இருக்கிறதோ அவர்களைப் பயன்படுத்துகிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மதராஸ் மாஃபியா கம்பெனி திரைப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆரத்யா, “இந்தத் திரைப்படத்தில் ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இக்கதாபாத்திரத்திற்கு யாராவது ஆங்கிலோ இந்தியனையோ அல்லது மலையாளியையோதான் நடிக்க வைப்பார்கள். ஆனால், இயக்குநர் அதை உடைத்து என்னைத் தேர்ந்தெடுத்துகிறார். நான் 4 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். காந்தி கண்ணாடி திரைப்படத்தில் நடிகை அர்ச்சனாவின் இளவயது தோற்றத்தில் கிராமப் பின்னணியில் நடித்திருக்கிறேன்.
ஆனால், இயக்குநர் மாரி செல்வராஜ் அர்ப்பணிப்பு இருந்ததால் மலையாள நடிகைகளை நடிக்க வைத்ததாகச் சொல்கிறார். ஏன் அது எங்களிடம் இல்லையா? தமிழிலும் அர்ப்பணிப்புடனே நாங்கள் நடித்து வருகிறோம். அது உங்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் வந்து சேரவில்லை. அதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும். ஓடுகிற குதிரையில்தான் பந்தயம் கட்டுகிறார்கள். ஓடுவதற்குத் தகுதியான ஒரு குதிரை இருக்கிறது தைரியமாகப் பந்தயம் கட்டுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
நடிகையின் இந்த தைரியமான பேச்சுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஷாருக்கான் பிறந்த நாள்: கீங் டீசர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.