துருவ் 
செய்திகள்

மணிரத்னம் படத்திற்குத் தயாராகும் துருவ்?

மணிரத்னம் - துருவ் கூட்டணியில் படம் உருவாகவுள்ளதாம்...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் துருவ் இயக்குநர் மணிரத்னம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் - துருவ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது. கபடியை மையமாகக் கொண்டு உருவான இப்படத்தில் நடிகராக துருவ் நல்ல உழைப்பைக் கொடுத்திருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இப்படம் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்துள்ளதால் துருவ்வின் அடுத்த படம் குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

துருவ் அடுத்ததாக, டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு படத்தில் இணைவார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ள காதல் திரைப்படமொன்றில் துருவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

actor dhruv commits to movie with director maniratnam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்திரப் பதிவு: வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்!

13 ரயில்களின் எண்கள் மாற்றம்

பேருயிரைக் காப்பது கடமை

செல்லூா் புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க துணை முதல்வரிடம் மனு

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

SCROLL FOR NEXT