நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா டிரைப்படத்தைப் பணத்துக்காக மட்டும் உருவாக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா திரைப்படம் மூலம் இந்தியளவில் புகழடைந்துள்ளார். வணிக ரீதியாகவும் இவருக்கு நல்ல மார்க்கெட் அமைந்துள்ளதால் இனி பான் இந்திய படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்தைப் பணத்திற்காக மட்டும் எடுத்துவிட முடியாது. நான் வேறு கதையைப் படமாகியிருந்தால் இவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்க மாட்டேன். காந்தாராவை மக்கள் கலாசாரா வேறுபாடுகளைக் கடந்து அதிகம் பேசியபோது இதை நியாயத்துடன் முடிக்க வேண்டும் என நினைத்தேன்.
காந்தாராவின் முன்கதையைச் சொல்வதன் மூலம் அதற்கு நியாயம் சேர்க்க முடியும் என நம்பினேன். தெய்வீகத்தின் தலையீட்டால் காந்தாரா சாப்டர் - 1 படத்தை எடுத்தேன். ” எனத் தெரிவித்துள்ளார்.
காந்தாரா சாப்டர் - 1 திரைப்படம் இதுவரை ரூ. 850 கோடி வரை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆட்டோகிராஃப் மறுவெளியீட்டுத் தேதி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.