இயக்குநர் வெற்றி மாறனின் அரசன் திரைப்படம் தரமான அனுபவமாக இருக்கும் என நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
நடிகர் கவின் இயக்குநர் வெற்றி மாறனின் கிராஸ்ரூட் நிறுவன தயாரிப்பில் நடித்துள்ளார். மாஸ்க் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்ரணன் இயக்கியுள்ளார்.
இப்படம் நவ. 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவுள்ளது. இதற்கான புரமோஷன் நேர்காணல்களைக் கவின் கொடுத்து வருகிறார்.
அப்படி, நேர்காணல் ஒன்றில் பேசும்போது, “இயக்குநர் வெற்றி மாறனின் அரசன் திரைப்படம் குறித்து எனக்கு நிறைய தெரியும். ஆனால், எதுவும் சொல்ல மாட்டேன். ஒன்றே ஒன்று சொல்கிறேன், இப்படம் தரமாக இருக்கும். இதுவரை நாம் பார்க்காத கூட்டணி இதில் இணைந்திருக்கிறது. நிச்சயம் அசத்தலாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பாண்டிராஜ் - ஹரிஷ் கல்யாண் கூட்டணியில் புதிய படம்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.