காந்தா வாழ்வில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா: துல்கர் சல்மான்
காந்தா குறித்து துல்கர் சல்மான்...
நடிகர் துல்கர் சல்மான் காந்தா திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “காந்தா”. இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான், “காந்தா திரைப்படம் iஇதனுடன் தொடர்புடைய அனைவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினோம் என நினைக்கிறேன்.
எனக்கு தமிழ் அவ்வளவு பிடிக்கும். நம் சினிமா கோடம்பாக்கத்திலிருந்துதான் மற்ற மாநிலங்களுக்குச் சென்றது. இப்படத்தில் அந்தக்கால சினிமா ஸ்டூடியோ கலாசாரங்களையும் அதன் கதைகளையும் அழகாக பதிவு செய்திருக்கிறோம். அதை நீங்கள் ரசிப்பீர்கள்” என்றார்.
actor dulquer salmaan spokes about kaantha movie
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.