அநாகரீகமான கேள்வியைக் கேட்ட பத்திரிகையாளருக்கு நடிகை கௌரி கிஷன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகை கௌரி கிஷன் வளர்ந்துவரும் இளம் நடிகை. 96 திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர், கர்ணன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த அதெர்ஸ் (others) திரைப்படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது, பத்திரிகையாளர் ஒருவர் கதாநாயகனிடம், கௌரி கிஷனைத் தூக்கினீர்களே அவர் உடலின் எடை எவ்வளவு?’ எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற படத்தின் சிறப்பு திரையிடலுக்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அந்த பத்திரிகையாளரிடம் கௌரி கிஷன், “என் உடல் எடையைத் தெரிந்துவைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? ஒருவரை உடல்ரீதியாக அவமானப்படுத்துவது எல்லாம் கேள்வியா? நான் ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறேன். அதைக் குறித்து கேளுங்கள்.” என்றார்.
மேலும் அப்பத்திரிகையாளர், “நீங்க பூசனதுபோல் இருந்தீர்கள். அதனால், கேட்டேன். தமிழ் சினிமாவில் இப்படித்தான் கேள்விகள் இருக்கும். உங்களிடம் மோடியைப் பற்றியா கேக்க முடியும்? குஷ்பு, சரிதா என எல்லாரும் இக்கேள்வியை எதிர்கொண்டவர்கள்தான்” என்றார்.
இதனால், ஆத்திரமான கௌரி கிஷன், “இங்கு நான் மட்டுமே பெண். என்னைச் சுற்றி இவ்வளவு ஆண்கள் இருக்கிறீர்கள். இப்படி உடல்தோற்றத்தை அவமானப்படுத்துவத்தை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு நடிகையின் உடல் எடையைத் தெரிந்துகொள்வது அநாகரீகமானதுதான். இது கேள்வியும் இல்லை நீங்க பத்திரிகையாளரும் இல்லை. உங்கள் துறைக்கு அவமானத்தைக் கொடுக்கிறீர்கள்” என வாக்குவாதம் செய்தார். இதனால், நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க: அஜித்துடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.